கணவரை 'சார்' என்று அழைத்த பிரபல பாடகி.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,March 03 2023]

தமிழ் திரை உலகின் பிரபல பாடகி ஒருவர் தனது கணவரை விருது வழங்கும் விழாவின் மேடையில் ‘சார்’ என்று அழைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் ஒருவர் ஜிவி பிரகாஷ் என்பதும் அவரது மனைவி சைந்தவி ஒரு நல்ல பாடகி என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சைமா விருது வழங்கும் விழா நடைபெற்ற போது அதில் சைந்தவிக்கு தமிழின் சிறந்த பாடகி விருது ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வயல்’ என்ற பாடலை பாடியதற்காக வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்றுக் கொண்ட பாடகி சைந்தவி இந்த பாடல் ஜிவி சாருக்கும் வெற்றிமாறன் சாருக்கும் மிகவும் பிடித்த பாடல் என்று கூறினார். மேலும் இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி தான் பாட இருந்தது என்றும், அவர் ரிகார்டிங் நேரத்தில் வரவில்லை என்பதால் டிராக் மட்டும் பாடிய என்னை வெற்றிமாறன் சார், ஜிவி சார் பாட வைத்தார்கல் என்றும் தெரிவித்தார். தனது கணவரை சார் என்று அவர் அழைத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் தனது கணவரை பாப்பா, பட்டாணி என்றும் செல்லமாக அழைப்பதாக அதே மேடையில் தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடகி சைந்தவின், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்நியன் திரைப்படத்தில் இடம் பெற்ற ’அண்டங்காக்கா கொண்டைக்காரி’ என்ற பாடலை தான் முதலில் பாடினார். அதன் பிறகு அவர் பல இசையமைப்பாளர்கள் கம்போஸ் செய்த பாடல்களை பாடியுள்ளார் என்பதும் பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.