28 வயது காதலனை மணந்த 40 வயது பிரபல பாடகி: வாழ்த்த வந்த முன்னாள் கணவர் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
40 வயதான பிரபல பாடகி 28 வயது காதலனை திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க வந்த பாடகியின் முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உலகப் புகழ் பெற்ற பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜேசன் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் வெறும் 55 மணி நேரம் மட்டுமே நீடித்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் கெவின் என்பவரை திருமணம் செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ், 2007ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அஸ்காரி என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ் காதலித்து வந்தார். இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்ஸ்யின் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்ததால் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி திருமண நடக்கும் இடத்திற்கு ஜேசன் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்
தான் பிரிட்னி ஸ்பியர்ஸ் அழைப்பின் பேரில்தான் வந்ததாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் ஜேசன் கூறியும், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
how the hell did jason alexander get inside britney's home??? pic.twitter.com/bf6IVgBPqG
— britney archive (@archiveney) June 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments