எங்கள் தலைமுறையில் முதல் நபர்.. குடும்பத்திற்கு பெருமை சேர்த்த அந்தோணி தாஸ் மகள்..!

  • IndiaGlitz, [Friday,August 04 2023]

பிரபல பாடகர் அந்தோணி தாஸ் தலைமுறையில் முதல் நபராக அவரது மகள் பட்டதாரியாகி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கருணாஸ் நடித்த ’திண்டுக்கல் சாரதி’ என்ற திரைப்படத்தில் ’திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ என்ற பாடலின் மூலம் பாடகர் ஆக அறிமுகமானவர் அந்தோணி தாஸ். இதனை அடுத்து அவர் ’சூதுகவ்வும்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ஜிகர்தண்டா’ ’முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அந்தோணி தாஸ், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்தோணி தாஸ் நாட்டுப்புறக் கலைஞர் ரீட்டா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது மகள் தற்போது கல்லூரி படிப்பை முடித்து முடித்து பட்டதாரி ஆகி உள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் எங்கள் தலைமுறையில் முதல் பட்டதாரி என்று பெருமையுடன் தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

More News

'ஜெயிலர்' படத்தில் சிவகார்த்திகேயன்.. லென்ஸ் வைத்து கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் இருப்பதை நெட்டிசன்கள் லென்ஸ் வைத்து

அமிதாப், நானியை அடுத்து மேலும் 2 பிரபலங்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தலைவர் 170' ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' திரைப்படத்தின் தகவல்கள்

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' ஆகிய மூன்று படங்களிலும் வில்லன் தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் வெளியான 'அநீதி' என்ற படத்தில் ஹீரோவாக

மாளவிகா மோகனனுக்கு 'தங்கலான்' குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மாஸ் போஸ்டர் வைரல்..!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில்  விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'தங்கலான்'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று

2 ஏக்கர் தக்காளி செடிகள் நாசம்… விலையேறிய பின்பு விவசாயிக்கு நடந்த கொடுமை?

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக புலம்பி வருகின்றனர்