அதிமுகவில் இருந்து திடீரென விலகிய பிரபல பாடகி
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து அரசியல் பிரபலங்களும், திரையுலகை சேர்ந்த பலரும் விலகி வருவதை பார்த்து வருகிறோம்,.
அந்த வகையில் கிராமிய பாடல்கள் பாடும் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவி அனிதா சற்றுமுன் அதிமுகவில் இருந்து திடீரென விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த தகவலை சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்த அனிதா குப்புசாமி, தான் வேறு எந்த அணியிலும் இணையப்போவது இல்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்க விருப்பமில்லாததால் சில நேரங்களில் பொய் கூறி தவிர்த்து வந்ததாகவும், சசிகலா சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் அவரை ஆதரித்திருப்பேன் என்றும் அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகும் இந்த முடிவை தனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டதால் எடுத்துள்ளதாகவும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout