close
Choose your channels

பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!

Thursday, June 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’காதலன்’ என்ற திரைப்படத்தில் ‘பேட்ட ராப்’ என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானவர் ஷங்கர் மகாதேவன். அவர் அதன்பிறகு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த படங்களிலும், மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் ஏராளமான பாடல்களையும் பாடினார். மேலும் இவர் விஜய் டிவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகவும் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் பாடகர்களுக்கு தனது அறிவுரையையும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய மனைவி சங்கீதா மகாதேவன் மற்றும் மகன்கள் சித்தார்த் மகாதேவன், சிவம் மகாதேவன் ஆகியோர் அந்தப் புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஷங்கர் மகாதேவன் இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகன்களா? என கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment