என்னை கருவாச்சின்னு நிறைய பேர் கிண்டல் செஞ்சாங்க: பாடகி ஸ்வாகதா பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி மற்றும் நடிகையான ஸ்வாகதா தன்னை சிறுவயதில் கருவாச்சி என்று பலர் கிண்டல் செய்து உள்ளார்கள் என்று நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
பாடகி மற்றும் நடிகை ஸ்வாகதா நமக்க்கு அளித்த பேட்டியில் மேலும் கூறிய போது, ‘எங்கள் வீட்டிலேயே நான் மட்டும்தான் கருப்பாக இருப்பேன். இதனால் என்னை எல்லோரும் அழகற்ற பிள்ளை என்றும், கருவாச்சி என்றும் கிண்டல் செய்வார்கள். இப்படி ஒரு கால சூழலில் வளர்ந்த நான் என்னை அழகி என்று எப்போதுமே நினைத்துக் கொள்வதில்லை. எனக்கு தெரிந்த வகையில் எனக்கு பொருத்தமான உடைகளை அணிந்து தான் நான் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறேன்.
என்னுடைய புகைப்படங்களுக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை நான் பார்த்ததே இல்லை. நான் பார்ப்பதற்கு முன்னரே என்னுடைய மேனேஜர்கள் மற்றும் உதவியாளர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை டெலிட் செய்து விடுவார்கள். அதுமட்டுமின்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்தவர்களை பிளாக் செய்தும் விடுவார்கள். கிட்டத்தட்ட 3000 பேர்கள் இன்ஸ்டாகிராமில் என்னுடைய அக்கவுண்டில் இருந்து பிளாக் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பாடகி ஸ்வாகதா கூறிய சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments