ஒரு Bullyஐ பத்தி இவ்வளவு சொல்றாங்க மணிமேகலை.. பாடகி சுசித்ரா கூறிய திடுக்கிடும் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக மணிமேகலை கூறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஒரு தொகுப்பாளனி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்ன அவ்வளவு முக்கியமா? எதனால் நான் அந்த நிகழ்ச்சியை பத்தி பேச வேண்டும். மேலும் எதற்கு மணிமேகலைக்கு நான் சப்போர்ட் செய்ய வேண்டும். ஏனெனில் இது ஒரு ஷோ மட்டுமல்ல, ஒரு Bullyஐ பற்றி ஒருவர் இவ்வளவு கண்ணியமாக அந்த டாக்சிக் ஜோனில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டு அவர் உண்மையை சொல்கிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியது எவ்வளவு தைரியமான முடிவு. சரியான முடிவும் கூட.
அதிலிருந்து வெளியேறிய பிறகு, அங்கே என்னவெல்லாம் நடந்தது என்பதை மிகவும் கிளியராக ஒரு வீடியோ போட்டு இருக்கிறார் மணிமேகலை. மணிமேகலைக்கு எனது வாழ்த்துக்கள். உன் மீது எனக்கு மிகுந்த மரியாதை வருகிறது. நான் உனக்கு ஆதரவு தருகிறேன்.
அந்த பொம்பளை எப்பேர்ப்பட்டவர் என்பதை அவருடைய கணவரிடம் பேசிப் பார்த்தால் எல்லோருக்கும் தெரியும். அந்த பையன் எனக்கு தம்பி மாதிரி, மிகவும் அருமையான பையன், அவனை நாசம் செய்துவிட்டார். இதையெல்லாம் பேசினால் நான் வதந்தி சொல்றேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன இருந்தாலும் நான் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்கிறேன்’ என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com