சிவாஜி போல் நடித்து கொண்டிருந்தபோதே போன உயிர்.. அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிங்கப்பூரை சேர்ந்த சிவாஜி அசோகன் என்பவர், சிவாஜி கணேசன் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் ஜாம்பவான் நடிகர் சிவாஜி கணேசன் என்பதும், அவரைப் பின்பற்றி இன்று வரை பல நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிலையில், சிவாஜியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சிங்கப்பூரை சேர்ந்த அசோகன் என்பவர், சிவாஜி கணேசன் போலவே நடை, உடை, பாவனைகளை கொண்டு பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
நேற்று இரவு அவர், சிவாஜி கணேசன் வேடமணிந்து, அவர் நடித்த படத்தின் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவைக் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
"உயிர் வாழ்ந்த கடைசி நிமிடம் வரை மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கிய உண்மையான கலைஞர் சிவாஜி அசோகன்" என்றும், "அவருடைய மறைவினை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது" என்றும் பலர் கூறி வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
*Singapore Sivaji, used to perform in Malaysia. He passed away while performing on stage* ... See till the last frame.🙏🏽 Shocking & So sad
*Singapore Sivaji, used to perform in Malaysia. He passed away while performing on stage* ... See till the last frame.🙏🏽
— Bharatha4Ever (Modi Ka Parivaar) (@RSBHAT) October 13, 2024
Shocking & So sad
Every movement was like Nadigar Thilagam . 🥲
Cardiac Arrest pic.twitter.com/OAeZukchsi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments