தீபாவளி வாழ்த்து சொன்ன சிங்கப்பூர் போலீஸ்.. அதிலும் ரஜினி இருக்காரே?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிங்கப்பூர் போலீசார் தீபாவளி வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அதிலும் ரஜினி ஸ்டைல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமாக உள்ளனர்.
நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், சிங்கப்பூர் போலீசார் தனது சமூக வலைத்தளத்தில் தீபாவளி வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் ரஜினி ஸ்டைலில் நடந்து வருவதும், அதற்கான காட்சிகள் "ஜெயிலர்" படத்தில் இடம் பெற்ற காட்சிகளுக்கு இணையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னணியில் "ஜெயிலர்" பட பாடலுடன் வெளியாகி உள்ள இந்த வீடியோவை பார்த்து ரஜினி ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும், இந்த வீடியோவுக்கு லைக் மற்றும் கமெண்ட் வருவதாகவும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் போலீசார் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வீடியோவில் கூட நம்ம தலைவர் தான் என்று ரஜினி ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
#Singapore police force shares their Diwali wishes . Pure goosebumps
— Suresh balaji (@surbalutwt) October 30, 2024
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#Rajinikanth | #Rajinikanth𓃵 | #Superstar @Rajinikanth | #Vettaiyan | #Coolie | #Jailer | #Police | #Jailer2 pic.twitter.com/9WvrSVax4E
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com