ஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

கடந்த பல ஆண்டுகளாக 1,400 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை ஸ்பை கேமராக்கள் மூலம் எடுத்த பலே குற்றவாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

சிங்கப்பூரைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் பெண்களின் அந்தரங்க ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளார். ஸ்பை கேமரா, மொபைல் கேமரா, ஸ்பை கடிகாரம், உள்பட பல்வேறு உபகரணங்கள் மூலம் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,அலுவலகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய அந்தரங்கங்களை படம் பிடித்து வீடியோக்களாக வைத்துள்ளார்

இந்த நிலையில் இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரை அந்தரங்கமாக வீடியோ எடுத்த போது அந்த பெண்ணால் பிடிபட்டு தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது ’பொது இடங்களான பேருந்துகள், இரயில் நிலையம், ஆகிய இடங்களில் பெண்களின் அந்தரங்கங்களை படம் பிடித்ததாகவும் குறிப்பாக கழிவறைகளில், குளியலறைகளில், உடைமாற்றும் இடங்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களின் அந்தரங்கங்களை ஆபாசமாக படம் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த அருவருக்கத்தக்க செயலை செய்து வரும் இவர் இதுவரை யாரிடமும் பிடிபடாமல் சுமார் 1400க்கும் மேற்பட்ட வீடியோக்களுக்கு மேல் இந்த நபர் பதிவு செய்திருப்பது போலீசாரையே அதிர வைத்துள்ளது