இந்தியாவில் மட்டுமல்ல.. சிங்கப்பூர், ஜப்பானிலும் 'காவாலா' ஜுரம்.. தமன்னாவின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,July 26 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பாக ’காவாலா’ என்ற பாடல் எதிர்பாராத வகையில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவில் மட்டுமே இந்த பாடல் வைரலான தற்போது சிங்கப்பூர் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பாடலுக்கு அந்நாட்டு பொதுமக்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,.

அந்த வகையில் ஜப்பானில் சேர்ந்த ஒரு பெண்ணும் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணும் ’காவாலா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் தமன்னா பகிர்ந்து உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.வரும் 28ஆம் தேதி ’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதேபோல் இன்று இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

அட்லியுடன் செம்ம ரொமான்ஸ்.. க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா அட்லி..!

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் தனது கணவருடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த

ஸ்டார் விஜய் வழங்கும் புதிய ரியாலிட்டி ஷோ 'கதாநாயகி'.. தொடங்கும் தேதி அறிவிப்பு..!

பார்வையாளர்களுக்கு வசீகரிக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது.  ஸ்டார் விஜய் பல எண்ணற்ற நட்சத்திரங்களை

சென்னை திரும்பினார் அஜித்.. ஸ்டைலிஷ் வீடியோ வைரல்.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் வந்து

எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் Role கிடைச்சது ஒரு வரம் - நடிகர் விமல் குமார்

எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் நடிகர் கமலேஷ் அவர்கள் அவரின் மகளுக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தார்.

கொரேனாவைவிட மோசமான மெர்ஸ் வைரஸ் பரவல்… எச்சரிக்கை விடுக்கும் WHO…!

கொரோனோ வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளையே புரட்டிப் போட்டுவிட்டது