ஆன்லைனில் பாடம் நடத்திய போது திடீரென வந்த ஆபாச வீடியோ: ஹேக்கர்கள் கைவரிசையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலிருந்து பணி செய்வது மற்றும் ஆன்லைன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ஆகியவை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை சேர்ந்த ஜூம் என்ற செயலி மூலம் ஆன்லைனில் பெரும்பாலானவர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிங்கப்பூரில் இந்த செயலி மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வீடியோ மூலம் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென அதில் ஆபாச வீடியோ வந்தது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் ஹேக்கர்கள் இந்த செயலிக்குள் புகுந்து பாட வீடியோவுக்கு பதிலாக ஆபாச வீடியோவை புகுத்தி உள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் ஜூம் செயலியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் அந்த செயலியை சிங்கப்பூர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த இந்த செயலியை பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி வந்த போது தற்போது திடீரென இந்த செயலியில் ஹேக்கர்களால் ஆபாச வீடியோக்கள் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர் அரசு மட்டுமின்றி ஆஸ்திரேலிய ராணுவம், பெர்க்லி, கலிபோர்னியா அரசு பள்ளிகள், நெவடா அரசு பள்ளி, ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், கூகுள், நாசா, நியூயார்க் அரசு பள்ளிகள், ஸ்மார்ட் கம்யூனிகேஷன்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், தைவான் அரசு, இங்கிலாந்து ராணுவம், அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவையும் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments