நுகர்ந்தாலே போதும்… மதுப்பிரியர்களை குஷிபடுத்தும் புது வரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மது வகைகளில் எவ்வளவோ புதுப்புது வரவுகள் வந்துவிட்டன. ஆனாலும் நீராவியை உறிஞ்சுவது போன்று மதுப்புகையை உறிஞ்சியே போதையேற்றிக் கொள்ளும் புது வரவை இதுவரை யாரும் கேள்விபட்டே இருக்கமாட்டோம். அப்படியொரு வித்தியாசமான மதுவை சிங்கப்பூரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இதில் இருக்கும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். ஒருமுறை நீங்கள் போதையேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் செலவாகும் என்பதுதான் பதற வைக்கிறது. சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த மது விற்பனை செய்யப்படுகிறதாம்.
இந்திய மதிப்பில் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் இந்த மதுவை பணம் செலுத்தியவர் மட்டும் ஒருகுறிப்பிட்ட அளவு நுகர்ந்து கொள்ளலாம். ஆனால் 50 வயதிற்கு கீழ் இருக்கும் யாருக்கும் இந்த மது விற்பனை செய்யப் படுவதில்லையாம். கொரோனா நேரத்தில் நீராவி பிடிப்பதிலேயே நம்மூர் மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அரசாங்கமும் சுகாதாரத்துறையும் நீராவி பிடிப்பதினால் கொரோனா வருவதை தடுக்க முடியாது என்று தெரிவித்த பிறகும் பல லட்சக் கணக்கான மக்கள் இன்றும் நீராவி பிடித்து வருகின்றனர்.
ஆனால் கொரோனா நீராவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாத சிங்கப்பூர் நிறுவனம் வித்தியாசமான முறையில் மதுவகையை தயாரித்து தனது கல்லாவை நிரப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கொரோனா நேரத்தில் சர்வதேச விமான நிறுவனங்கள் பல முடங்கியே போய்விட்டன. இப்படி இருக்கும்போது ஷாங்கே விமான நிலையதில் கொரோனா நேரத்தில் நீராவி மது விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments