டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத தயாராகி நடிக்க வந்துட்டேன்.. 'சிங்கப்பெண்ணே' நடிகை தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் படித்து முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது என்று ’சிங்க பெண்ணே’ சீரியலில் நடித்து வரும் நடிகை தாரணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இவர் கொரோனா வரை படித்துக் கொண்டிருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது அம்மாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆனதால் சென்னைக்கு குடும்பத்துடன் வந்தனர்.
சென்னையில் மேக்கப் ஆர்டிஸ்ட் மாடலாக வேலை கிடைத்த நிலையில் அப்போதுதான் சன் டிவியில் ’செவ்வந்தி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் சின்ன கேரக்டராக இருந்தாலும் யோசிக்காமல் நடித்ததால் அடுத்தடுத்து ’சுந்தரி’ உள்ளிட்ட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது ’சிங்கப்பெண்ணே’ சீரியலில் தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது என்றும் இந்த கேரக்டர் எனக்கு மிகவும் மனதுக்கு பிடித்த கேரக்டர் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மதுரை பெண்ணான நான் மீடியாவுக்கு வந்தது குறித்து எங்கள் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி பேசினார்கள், ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு முழு ஆதரவு கொடுத்து வருவதால் மற்றவர்கள் பேசுவது குறித்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார், இருப்பினும் மதுரைக்கு போவதற்காக காத்திருப்பதாகவும், என் ஊர் மக்கள் என்னை எப்படி பார்க்கிறாங்க என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து நிறைய சீரியலில் நடிக்க வேண்டும் , ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு, மதுரைக்கார பொண்ணும் கதாநாயகியாக நடிக்க முடியும் என்று மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று தாரணி அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments