சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியலில் திடீரென ஒரு மாற்றம்: 'இவருக்கு பதில் இவர்'


Send us your feedback to audioarticles@vaarta.com


சன் டிவியில் ’சிங்கப்பெண்ணே’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’சிங்கப்பெண்ணே’ என்பதும் மனிஷா மகேஷ் என்பவர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த தொடரை தனுஷ் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது
கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் விவசாயி மகள் குறித்த கதை தான் ’சிங்கப்பெண்ணே’. இந்த நிலையில் இந்த சீரியலில் ஆனந்தியின் தோழி ரெஜினா என்ற கேரக்டரில் ஜிவி டிம்பிள் என்பவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதை அடுத்த ’சிங்கப்பெண்ணே’ சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறி இருக்கும் நிலையில், அவரது ரெஜினா கேரக்டரில் விஜே கல்யாணி நடிக்க உள்ளார். விஜே கல்யாணி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மோதலும் காதலும்’ என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ’சிங்கப்பெண்ணே’ தொடரிலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments