சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியலில் திடீரென ஒரு மாற்றம்: 'இவருக்கு பதில் இவர்'

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

சன் டிவியில் ’சிங்கப்பெண்ணே’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’சிங்கப்பெண்ணே’ என்பதும் மனிஷா மகேஷ் என்பவர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த தொடரை தனுஷ் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது

கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் விவசாயி மகள் குறித்த கதை தான் ’சிங்கப்பெண்ணே’. இந்த நிலையில் இந்த சீரியலில் ஆனந்தியின் தோழி ரெஜினா என்ற கேரக்டரில் ஜிவி டிம்பிள் என்பவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதை அடுத்த ’சிங்கப்பெண்ணே’ சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறி இருக்கும் நிலையில், அவரது ரெஜினா கேரக்டரில் விஜே கல்யாணி நடிக்க உள்ளார். விஜே கல்யாணி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மோதலும் காதலும்’ என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ’சிங்கப்பெண்ணே’ தொடரிலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறிய 'வேட்டையன் 'நடிகர்..!

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி எதிர்பாராமல் படுதோல்வி அடைந்தது.

நீ இல்லாமல் ஒரு திருமண நாள்.. மறைந்த கணவர் குறித்து உருக்கமான பதிவு செய்த சீரியல் நடிகை..!

கணவர் மறைந்த பின்னர் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை 'நீ இல்லாமல் நான் ஒரு திருமண நாளை கொண்டாடி கொண்டிருக்கிறேன்' என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். 

விஜய்சேதுபதிக்கு மலேசியாவில் கிடைத்த ஏமாற்றம்.. 'ஏஸ்' படத்தின் புதிய அப்டேட்..!

விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது படமான 'ஏஸ்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நடந்தது என்பதும் கிட்டத்தட்ட முழு படமும் மலேசியாவில் தான் படமாக்கப்பட்டதாகவும்

கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை நமிதா? அவரே அளித்த விளக்கம்..!

தமிழ் திரை உலகில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ்  - சைந்தவி என அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் வெளிய வந்து கொண்டிருக்கும் நிலையில்

KVN புரடொக்சன்ஸ் 'கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்' ஆடியோ பிசினஸ் விவரங்கள்.. இத்தனை கோடியா?

KVN புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது