தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியின் 31வது ஜமீனாக இருந்தவர் இவர் என்பதும், 1200 வருட பழமைவாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் முடி சூடிய ராஜாவாக திகழ்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பட்டம் கட்டபட்ட கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்தப்பதி என்பதால் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட 72 பாளையங்களில் ஒன்று தான் சிங்கம்பட்டி ஜமீன். இந்த 72 பாளையங்களில் 24 பாளையங்களுக்கு சிங்கப்பட்டி ஜமீந்தார் தான் தலைமை தாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த 1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதும் இருப்பினும் இந்த சட்டம் வருவதற்கு முன்பே பட்டம் சூட்டிய ராஜாக்களில் ஒருவராக இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
1936ம் ஆண்டில் தந்தை சங்கர தீர்த்தபதி மறைவுக்கு பின்னர் தனது 6வது வயதில் முடிசூட்டப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி தான் ஜமீன்தார் முறை ஒழிப்புக்கு பின்னர், இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிக் கொண்ட மன்னர்களில் கடைசி மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments