சூர்யாவின் 'எஸ் 3' பாடல்கள் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Sunday,November 20 2016]

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை புரிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் பாடல்கள் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. மேலும் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா தேதி இன்று அறிவிக்கப்படும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் 'எஸ் 3' படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு பாகங்கள் போலவே இந்த படத்திலும் மாஸ் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.