சூர்யாவின் 'சி 3' படத்தின் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Sunday,January 22 2017]

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் எதிர்பாராமல் ஒத்திவைக்கப்பட்ட இந்த படம் இம்முறை குறிப்பிட்ட தேதியில் நிச்சயம் ரிலீஸ் ஆகவுள்ளது சூர்யாவின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்திற்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'எஸ் 3' திரைப்படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று தமிழக அரசின் 30% வரிவிலக்கையும் பெற்றுள்ளது என்பதை பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடுகின்றது. ஒரு மாஸ் மசாலா படத்துக்கான சரியான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சர்வதேச போலீஸ் கேரக்டர், ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என இரண்டு முன்னணி நாயகிகள் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்களாக இருப்பதால் இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். கவர்னர் பதவியை ஏற்க தயார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி

தமிழக இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிகட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு நாளை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

பீட்டாவுக்கு தமிழக அரசு தடை. வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

டா என்ற அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நாளை வெகுசிறப்பாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பீட்டாவுக்கே தமிழக அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இளைஞர்கள் போராட்டம் வெற்றி. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு தலைவன் இல்லாத, தலைமை இல்லாத, தன்னலம் இல்லாத போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

த்ரிஷாவுக்கு பீட்டா தரப்பில் இருந்தும் நெருக்கடியா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் த்ரிஷா பீட்டாவின் ஆதரவாளர் என்றும், அதன் உறுப்பினர் என்றும் கூறப்பட்டதால் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் த்ரிஷா விளக்கம&

இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம். ஜனாதிபதியை சந்தித்த பின் தம்பித்துரை பேட்டி

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்ட வரைவு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நேற்றே அனுப்பி வைக்கப்பட்டத