சூர்யாவின் 'எஸ் 3' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,September 19 2016]

சூர்யாவின் சிங்கம் 3' திரைப்படம் இன்று மாலை வெளியாகவுள்ளதாக வந்த செய்தியினை காலையில் பார்த்தோம். இந்நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சிங்கம் 3' என்ற 'எஸ் 3' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.