விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,May 27 2019]

விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்' மற்றும் சிந்துபாத்' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் விஜய்சேதுபதி, 'சிந்துபாத்' படம் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'ராக்ஸ்டார் ராபர்' என்ற சிங்கிள் வீடியோ பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடல் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தத அருண்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.