விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்', '96', சீத்க்காதி' மற்றும் 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் சூப்பர்ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டும் அவர் சுமார் அரைடஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'சிந்துபாத்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் செகண்ட்லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'இறைவி' படத்திற்கு பின் மீண்டும் விஜய்சேதுபதி, அஞ்சலி ஜோடி சேரும் இந்த படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
 

More News

தனது கனவை திரைப்படத்தில் நிறைவேற்றிய இயக்குனருக்கு ரஜினி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கனவு, இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான். குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்றும்,

ஜிவி பிரகாஷ்-ரைசா படத்தின் வித்தியாசமான டைட்டில்!

ஒரு ஆண்டில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் நடித்த படங்கள் இவ்வருடம் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில்

சூர்யாவை அடுத்து சிம்புவுக்கு வில்லனாகும் ஆர்யா?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தில் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் படத்திலும் ஆர்யா வில்லனாக நடிக்க

எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி காலமானார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்றது 'கூண்டுக்கிளி'

அதிக பேராசையால் அந்தரத்தில் தொங்கும் தேமுதிக

ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்தின் தேமுதிக முடிவெடுத்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெற திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.