சிந்துபாத் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Tuesday,June 25 2019]

விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் கடைசி நேர பஞ்சாயத்து காரணமாக குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் தற்போது இந்த படத்திற்கான பிரச்சனைகள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியானது

இந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி ஏற்கனவே ஹவுஸ் ஓனர் உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் 'ஹவுஸ் ஓனர்' இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் சின்ன படங்கள் ரிலீஸ் ஆக உதவி செய்ய வேண்டும் என்றும் சிந்துபாத்' படகுழுவினர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணனின் கோரிக்கையை சிந்துபாத் படக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை. சற்றுமுன் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய்சேதுபதியும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார்.

More News

'பாகுபலி' நடிகருடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அப்துல்கலாம் கனவை நனவாக்க முயற்சித்த மாணவிக்கு விஜய்சேதுபதி உதவி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சினிமாத்துறையினர்களுக்கு மட்டுமின்றி சினிமாவையும் தாண்டி பலருக்கு உதவி செய்துள்ளார் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம்.

படப்பிடிப்புக்கு செல்லுமுன் மணிரத்னத்துடன் செல்பி எடுத்த நடிகை!

இயக்குனர் மணிரத்னம் ஒருபக்கம் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் 'வானம் கொட்டட்டும்'

யோகிபாபுவின் முதல் கனவுக்காதல் குறித்த தகவல்

பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்த யோகிபாபு, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிப்பது போன்று நடித்திருப்பார்.

பிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி! 

மேற்கிந்திய தீவுகளின் முன்னள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை