வங்கி மோசடியில் சிக்கிய லண்டனில் செட்டிலான தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் லோன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி ஒன்றில் ரூ.36 லட்சம் மோசடி செய்துவிட்டு லண்டனில் செட்டிலான நடிகை ஒருவர் மிது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடல்பூக்கள், சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சிந்துமேனன். இவர் இவருடைய சகோதர் ஒருவருக்கு ரூ.36 லட்சம் வங்கி லோன் வாங்க தனது சொத்துக்களை கியாரண்டி கொடுத்துள்ளார். இந்த நிலையில் இவர் கொடுத்த சொத்துக்களின் ஆவணங்கள் போலி என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிந்துமேனனின் சகோதரரையும் இன்னொரு பெண்ணையும் போலிசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்த சிந்துமேனன், தற்போது லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்வது குறித்து போலீசார் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

More News

கிலுஜோசப்: தபால் தலைக்கு தோன்றாத எதிர்ப்பு தாய்ப்பாலுக்கு மட்டும் ஏன்?

மலையாள இதழ் ஒன்றில் நடிகை கிலுஜோசப் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற அட்டைப்படம் வெளியாகியிருந்தது. இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்களும், கடுமையான விமர்சனங்களும் மாறி மாறி கிடைத்தன.

அதுக்குள்ள ரெண்டு வருசம் ஆச்சா? விஜே அஞ்சனாவின் ஆச்சரியம்

இன்று விஜே அஞ்சனா தனது இரண்டாவது திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடி வருகிறார்.கடந்த 2016ஆம் ஆண்டு இதே மார்ச் 10ஆம் தேதிதான் 'கயல்' சந்திரனை கைப்பிடித்தார் அஞ்சனா.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி

கோலிவுட்டின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெப் தொடர் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது

அறிவும் இதயமும் இல்லாத அசுரன்: காயத்ரி ரகுராம் திட்டியது யாரை தெரியுமா?

காதல் மிரட்டல் என்ற பெயரில் இளம்பெண் அஸ்வினியை அறிவும் இதயமும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான். அஸ்வினி குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவு செய்துள்ளார்.

பதில் சொல்லிட்டு போங்கள், ரஜினியை துரத்திய நிருபர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தபோது தன்னுடைய ஆன்மீக பயணம் குறித்த விபரங்களை தெரிவித்தார்.