பாவம் சீனா... தொடரும் அடுத்தடுத்த பாதிப்புகள்!!! மனதை உருக்கும் சம்பவங்கள்!!!

  • IndiaGlitz, [Monday,June 15 2020]

 

கொரோனா வைரஸின் ஆரம்பக்கட்டத்தில் சீனா படாதப்பாடு பட்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளிடையே பனிப்போரை உருவாக்கும் அளவிற்கு சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதைத்தவிர ஆஸ்திரேலியாவும் தற்போது சீனாவுடன் முரண்பாடு கொண்டு இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு மத்தியில் தென் சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை, பெருவெள்ளம் போன்ற ஆபத்துகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நாசமாகி இருக்கிறது. மேலும் 61 உயிரிழப்புகளும் நிகழ்ந்து இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சீனாவின் ஜெஜியாங் பகுதியில் ஒரு டேங்கர் லாரி வெடித்து பேராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் பகுதியில் லியாங்கன் என்ற கிராமத்தை ஒட்டி இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு டேங்கர் லாரி கட்டுப்பாடு இல்லாமல் கட்டிடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தினால் டேங்கர் லாரி முழுவதும் வெடித்து பெரும் புகை மூட்டமே உருவாகி இருக்கிறது. பரபரப்பான சாலையில் விபத்து நிகழ்ந்ததால் 19 உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. அதைத்தவிர 170 க்கும் மேற்பட்டோருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனா முழுவதும் சாலைப் போக்குவரத்து கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தரவுகளும் கூறுகின்றன. சீனா அதன் உள்கட்டமைப்பு வசதிகளை பல ஆண்டுகளாகச் சீராக்கி வருகிறது. இதனால் நாடு முழுவதும் சீரான முறையில் சாலைகள் போடப்பட்டு உள்ளன. இந்த சாலை வசதிகளால் போக்குவரத்துப் பெருக்கம் அதிகமாகி இருப்பதாகவும் மேலும் சாலை விபத்துகள் முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக உலகச் சுகாதார அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.

 

 

More News

கொரோனாவால் அதிகரித்த உயிரிழப்பு: புதைக்க இடமில்லாமல் பிரேசில் செய்த காரியம்!!!

உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துவரும் நாடுகளுள் ஒன்றான பிரேசில் தற்போது ஒரு மோசமான காரியத்தைச் செய்துவருவதாக அந்நாட்டு

சென்னையில் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2வது அலை எப்போது? மருத்துவ நிபுணர் குழு பேட்டி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா வைரஸ் எதிரொலி: குழந்தைகளை மாற்றி கொண்ட தாய்மார்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் மர்மமாக உள்ளது. கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் பிறக்கும் குழந்தை வைரஸ் தாக்குதல் இல்லாமல்

வக்கீலாக மாறிய சூர்யா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்

சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று 'சில்லுனு ஒரு காதல்'. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.