கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன்
- IndiaGlitz, [Saturday,July 04 2020]
சிம்ரன் தமிழில் நடித்த முதல் திரைப்படமான ’விஐபி’ மற்றும் ’ஒன்ஸ்மோர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் 23 வருடங்கள் நிறைவடைகிறது. ஒரே நாளில் ஒரு அறிமுக நடிகையின் இரண்டு திரைப்படங்கள் வெளிவருவதும், அந்த இரண்டு படங்களும் வெற்றி அடைவதும் மிகவும் அரிதானது என்பதும் அந்த வாய்ப்பு நடிகை சிம்ரனுக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா, அப்பாஸ், ரம்பா ஆகியோர்களுடன் சிம்ரன் நடித்த ’விஐபி’ திரைப்படம், சிவாஜி கணேசன், விஜய் ஆகியோருடன் சிம்ரன் நடித்த ’ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என இரண்டுமே சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது என்பது சிம்ரனுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு திரைப்படங்களையும் தனது மலரும் நினைவுகளாக சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் திரையுலக மேதை சிவாஜி கணேசன் அவர்கள் உடன் பணிபுரிந்த தினங்களை நாம் நினைத்துப் பார்த்து பூரிப்படைகிறேன். எனது வாழ்நாள் கனவு நிறைவேறியதும், அவருடைய ஆசிர்வாதம் எனக்கு முழுமையாக கிடைத்தது என்பதையும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் நண்பன் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோர்களுடன் நான் தமிழ் சினிமாவில் அறிமுகமானது எனது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்’ என்றும் சிம்ரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் சிம்ரனின் இந்த பதிவிற்கு லைக்ஸ்களும் ரீடுவிட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிம்ரன் ’ராக்கெட்டரி’, ‘சுகர்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘வணங்காமுடி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 years after, the memories of working with the legend #SivajiGanesan sir is so vivid. It was a dream come true and to this day I believe it's the blessing and learning from him that made me who I am.
— Simran (@SimranbaggaOffc) July 4, 2020