ஆர்யாவின் 'கேப்டன்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த சிம்ரன்!

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

ஆர்யா நடித்த ’டெடி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் மீண்டும் ’டெடி’ படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் ஆர்யா இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ’கேப்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சிமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ’கேப்டன்’ படக்குழுவினருடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’கேப்டன்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை என்றும், அவ்வளவு வேகமாகவும் ஜாலியாகவும் இருந்தது என்பதும் இந்த பயணத்தில் நானும் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் சிம்ரன் இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடிக்க உள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார். மதன்கார்க்கி பாடல் வரிகளில் யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.