அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த சிம்ரன்.. வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சிம்ரன் தான் நடித்து வரும் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படம் ’அந்தகன்’. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் பிரசாந்துடன் சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது என்பதும் 50க்கும் மேற்பட்ட டான்ஸ் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர் என்றும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் ’அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தை திரையில் பார்க்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ’அந்தகன்’ படத்தின் இரண்டு போஸ்டர்களை அவர் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
பாலிவுட் திரையுலகில் வெளியான ’அந்தாகான்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் பிரசாந்துக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தமிழகத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
It's a wrap on #Andhagan ?? A project we have all put our heart and soul into! Can't wait to share it with you all. See you soon in theatres ??️@actorprashanth @actorthiagaraja @PriyaAnand @Music_Santhosh pic.twitter.com/QL3tUnQ1IW
— Simran (@SimranbaggaOffc) November 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments