அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த சிம்ரன்.. வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,November 21 2022]

நடிகை சிம்ரன் தான் நடித்து வரும் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படம் ’அந்தகன்’. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் பிரசாந்துடன் சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது என்பதும் 50க்கும் மேற்பட்ட டான்ஸ் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர் என்றும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் ’அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தை திரையில் பார்க்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ’அந்தகன்’ படத்தின் இரண்டு போஸ்டர்களை அவர் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் திரையுலகில் வெளியான ’அந்தாகான்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் பிரசாந்துக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தமிழகத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இப்படி கொஞ்சம் விளையாடி பாருங்களேன்.. விக்ரமனுக்கு ஷிவன் கூறிய அறிவுரை!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது 50வது நாளை நெருங்கி வரும் நிலையில் தற்போது ஆட்டம் சூடு பிடித்துள்ளது என்பதும் இப்போதுதான் போட்டியாளர்கள் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகின்றனர்

அஜித்-அர்ஜூன் திடீர் சந்திப்பு.. 'மங்காத்தா 2' உருவாகிறதா?

'மங்காத்தா' படத்தில் இணைந்து நடித்த அஜித் மட்டும் அர்ஜூன் சமீபத்தில் சந்தித்துள்ள நிலையில் 'மங்காத்தா 2' படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ஜோதிகா: தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படமா?

தமிழ் தெலுங்கு திரைப்படம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்

தளபதி விஜய்யின் 'வாரிசு' ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

 தளபதி விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவான 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை பொங்கல்

விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்!

 விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'டிஎஸ்பி' திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.