'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கின்றேனா? சிம்ரன் அளித்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் 15 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார் என்பதும் தெரிந்ததே.
’சந்திரமுகி 2’ படத்தில் மனநல மருத்துவர் சரவணன் கேரக்டரில் ரஜினிகாந்த்தும், வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸும் நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகாவுக்கு சிம்ரன் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தியை தற்போது சிம்ரன் மறுத்துள்ளார். ’சந்திரமுகி 2’ படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், ஒரு தகவலை வெளியிடும் பத்திரிகைகள், அது குறித்த உண்மைத்தன்மையை தன்னிடம் கேட்டு அறிந்த பின்னர் வெளியிடும்படி கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிம்ரனின் இந்த விளக்கத்தை அடுத்து ’சந்திரமுகி 2’ படத்தில் தற்போது வரை அவர் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
It is a fake news I am sorry to disappoint my fans wanted to clarify I have not been approached for any such role for a movie. I kindly request you all to plz get it right before publishing it on any platform.
— Simran (@SimranbaggaOffc) June 2, 2020
Thank you. https://t.co/0xADfO3wwG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments