'காவாலா' பாடலுக்கு சிம்ரனின் க்யூட் கமெண்ட்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காவாலா’ என்ற பாடல் வெளியானது என்பதும் அதில் தமன்னாவின் கிளாமர் டான்ஸ் மற்றும் ரஜினியின் ஸ்டைல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியில் உருவாக்கிய 'காவாலா’ பாடல் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் AI டெக்னாலஜி மூலம் தமன்னாவை அவர் சிம்ரனாக மாற்றியுள்ளார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிம்ரன் ’AI டெக்னாலஜி மேஜிக்’ என்று பாராட்டியுள்ளார். அது மட்டுமின்றி தமன்னாவின் நடனத்திற்கு பாராட்டு தெரிவித்து அவர் இந்த வீடியோவை உருவாக்கிய ரசிகருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் அச்சு அசலாக சிம்ரன் இந்த பாடலுக்கு நடனம் ஆடியது போல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

More News

'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய பிக்பாஸ் தனலட்சுமி.. நெட்டிசன்களின் வேற லெவல் கிண்டல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

புளூசட்டை மாறனின் அநாகரீகமான விமர்சனம்.. பதிலடி கொடுத்த ஜிபி முத்து..!

சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ஒரு திரைப்படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களை தனிப்பட்ட முறையில் அநாகரிமாக விமர்சனம் செய்வார்

2 ஆண்டுகளுக்கு முன் டிராப் ஆன படமா 'கமல்ஹாசன் 233? அப்படின்னா ஏஆர் ரஹ்மான் தான் இசையா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடித்து தயாரிக்க இருந்த திரைப்படம் தான் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல்ஹாசன் 233' படம் என்று கூறப்படுகிறது.

விஜய் ஒரு நிஜ கதாநாயகன்.. இரவு பாடசாலைக்கு பாராட்டு தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்..!

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல்  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இரவு பாடசாலை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் அதாவது

பிரபலங்களுக்கும் இந்த நிலமையா? தக்காளி விலையால் கவலைபடும் பாலிவுட் நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தக்காளியின் விலை கூடியிருப்பதால் தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து, குறைவாக பயன்படுத்தி வருவதாகக் கூறியிருக்கும் தகவல்