விக்ரமின் 'மஹான்' படத்தி; சிம்ரன் கேரக்டர்: படக்குழுவினர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘மஹான்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்த்தே.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக சிம்ரன் நடித்துள்ளார் என்பதும் அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிம்ரன் இந்த படத்தில் நாச்சி என்ற கேரக்டரில் நடித்து உள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடித்துள்ள சனத், ராக்கி என்ற கேரக்டரிலும், முத்துக்குமார், ஞானம் என்ற கேரக்டரிலும் நடித்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று கேரக்டர்களின் புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் சத்யவான் என்ற கேரக்டரில் பாபிசிம்ஹா நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விக்ரம், துருவ் விக்ரம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Here's presenting @SimranbaggaOffc as NAACHI@ActorMuthukumar as GNANAM#Sananth as ROCKY #MahaanOnPrime from FEB 10 th #ChiyaanVikram #DhruvVikram @7screenstudio @PrimeVideoIN #Mahaan pic.twitter.com/d1UrQpPZ4L
— karthik subbaraj (@karthiksubbaraj) January 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments