இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. பிரபல நடிகருடன் வதந்தி கிளப்பியதால் ஆவேசமான சிம்ரன்..!

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

பிரபல நடிகருடன் இணைத்து நடிகை சிம்ரனை யூடியூப் சேனலில் வதந்தி கிளம்பியதை அடுத்து, நடிகை சிம்ரன் ஆவேசமாக இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும், சில படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிம்ரன், தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவரின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர், யூடியூப் சேனல் ஒன்றில் கணவர் தயாரிப்பில் சிம்ரன் நடிக்கும் படத்தில் நடிக்க முன்னணி நடிகர் மறுத்துவிட்டதாக வதந்தி பரவியது.

இந்த வதந்தியால் ஆவேசமான சிம்ரன், இப்படிப் பட்ட விஷயங்களை எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு நடிகையாக நான் சாதிக்க வேண்டியதை பல ஆண்டுகளுக்கு முன்பே சாதித்து விட்டேன். இப்போது என்னுடைய இலக்கு வேறு—என் குடும்பம், என் வாழ்க்கை. என குறுகிய வட்டத்தில் இருக்கும் என்னை பற்றி பேசுவதை உடனே நிறுத்துங்கள்! என்று காட்டமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

அட்லியால் தள்ளிப்போகுமா 'வாடிவாசல்'.. என்னதான் நடக்குது?

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும்,

நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது.. நடிப்புக்கு இல்லாமல் வேறு துறையில்..!

நடிகர் சிரஞ்சீவி 45 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பைத் தாண்டி, வேறொரு துறையில் அவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, "மெய்யழகன்" படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில்

அத்தான்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கார்த்தியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல்

சினிமாவில் சாதிக்க முடியாதவர்களால் தோல்வி அடையும் திரைப்படங்கள்.. பார்த்திபன் ஆதங்கம்..!

சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள், ஒரு கேமராவை தூக்கி வைத்து, விமர்சனம் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும், அந்த வகை வீடியோக்களே