இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. பிரபல நடிகருடன் வதந்தி கிளப்பியதால் ஆவேசமான சிம்ரன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகருடன் இணைத்து நடிகை சிம்ரனை யூடியூப் சேனலில் வதந்தி கிளம்பியதை அடுத்து, நடிகை சிம்ரன் ஆவேசமாக இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும், சில படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிம்ரன், தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவரின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர், யூடியூப் சேனல் ஒன்றில் "கணவர் தயாரிப்பில் சிம்ரன் நடிக்கும் படத்தில் நடிக்க முன்னணி நடிகர் மறுத்துவிட்டதாக வதந்தி பரவியது.
இந்த வதந்தியால் ஆவேசமான சிம்ரன், "இப்படிப் பட்ட விஷயங்களை எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு நடிகையாக நான் சாதிக்க வேண்டியதை பல ஆண்டுகளுக்கு முன்பே சாதித்து விட்டேன். இப்போது என்னுடைய இலக்கு வேறு—என் குடும்பம், என் வாழ்க்கை. என குறுகிய வட்டத்தில் இருக்கும் என்னை பற்றி பேசுவதை உடனே நிறுத்துங்கள்!" என்று காட்டமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
It's truly disheartening to see how people can emotionally manipulate you and how little your friends seem to care about it. Up until now, I’ve stayed quiet, but let me make it clear: I’m not desperate to line up and work with any big heroes. I've been there and done that. My…
— Simran (@SimranbaggaOffc) September 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments