சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். விஜய் ஆண்டனி நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காளி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அம்ரிதா. இவர் ஏற்கனவே 'படைவீரன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'காளி' படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் கிருத்திகாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து அம்ரிதா கூறியதாவது:
"நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது"
"விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்"
"படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க என்னை செலுத்தியது"
சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன், அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை திரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை"
இவ்வாறு அம்ரிதா கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com