திடீரென சினிமாவுக்கு வந்த சிம்ரன் கணவர்.. கணவன் - மனைவி இணையும் படத்தின் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சிம்ரனின் கணவர் திடீரென சினிமாவிற்கு வந்துள்ள நிலையில் சிம்ரன் அந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் தற்போது கூட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் வெளியான ’அந்தகன்’ திரைப்படத்தில் கூட அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சிம்ரனின் கணவர் தீபக் என்பவர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க அந்த படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இது குறித்து சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் ’தனது கணவர் தயாரிப்பாளராக மாறிய படத்தில் தான் நடிப்பதில் பெருமை கொள்வதாகவும், எங்களுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்து ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சிம்ரனின் கணவர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'தி லாஸ்ட் ஒன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் உடன் கூடிய அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை லோகேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear Media Friends, Fans & Well Wishers
— Simran (@SimranbaggaOffc) September 7, 2024
Today marks the next transition of my career, with Deepak turning a producer
Thanks for your support always...🙏
Happy Ganesh Chathurthi ✨
Unveiling "The Last One" 🔥@DeepakkCapt @fourdeeoffl @FilmmakerLokesh @onlynikil #SimsNext… pic.twitter.com/u2UOMxMq6g
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments