தயாரிப்பாளர் தவறாக நடந்து கொண்டார்: பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவர் அந்த சீரியலின் தயாரிப்பாளர்களில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் அதில் இருந்து விலகியதாக கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நாகினி என்ற தொலைக்காட்சித் தொடரின் நான்காவது சீசன் முடிந்து தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரின் பட்ஜெட்டை குறைக்கும் வகையில் இந்த தொடரின் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த சிம்ரன் சச்தேவாவுக்கு என்பவருக்கு திடீரென 40% சம்பளம் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத சிம்ரன் சச்தேவா அந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்
இது குறித்து அவர் கூறிய போது திடீரென 40% சம்பளத்தை குறைத்தனர், மேலும் சம்பளத்தையும் அந்த தயாரிப்பாளர் ஒழுங்காக தரவில்லை. அதுமட்டுமின்றி அந்த தொடரின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும்,மரியாதை இல்லாமலும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதால் தான் இந்த தொடரில் இருந்து நான் விலகியுள்ளேன் என்று கூறியுள்ளார். சிம்ரன் சச்தேவாவின் இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com