தயாரிப்பாளர் தவறாக நடந்து கொண்டார்: பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,June 04 2020]

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவர் அந்த சீரியலின் தயாரிப்பாளர்களில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் அதில் இருந்து விலகியதாக கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நாகினி என்ற தொலைக்காட்சித் தொடரின் நான்காவது சீசன் முடிந்து தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரின் பட்ஜெட்டை குறைக்கும் வகையில் இந்த தொடரின் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த சிம்ரன் சச்தேவாவுக்கு என்பவருக்கு திடீரென 40% சம்பளம் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத சிம்ரன் சச்தேவா அந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்

இது குறித்து அவர் கூறிய போது திடீரென 40% சம்பளத்தை குறைத்தனர், மேலும் சம்பளத்தையும் அந்த தயாரிப்பாளர் ஒழுங்காக தரவில்லை. அதுமட்டுமின்றி அந்த தொடரின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும்,மரியாதை இல்லாமலும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதால் தான் இந்த தொடரில் இருந்து நான் விலகியுள்ளேன் என்று கூறியுள்ளார். சிம்ரன் சச்தேவாவின் இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஆவேசம்

கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துளார்.

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பது உண்மையா? தயாரிப்பாளர் விளக்கம்

பிரபுதேவா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 

திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியத்தின் விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கெடுப்பு குறித்து நடிகர் பிரச்சன்னா பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அவர் ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு

கவுண்டமணியை தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்

காமெடி அரசர் கவுண்டமணி நடிக்காத படமே ஒரு காலத்தில் இல்லை என்ற நிலையில் ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி.