close
Choose your channels

"மன்மதன்" ரிட்டர்ன்ஸ்.....! இணையத்தில் வைரலாகும் சிம்பு புகைப்படங்கள்...!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம்தான் மாநாடு. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் உள்ள "மேஹெரசைலா" என்ற பாடல் தான் அண்மையில், யுடியூப் தளத்தில் வெளியாகி 2.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து. இந்த படத்திற்கான காட்சிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. அதேபோல் இயக்குனர் கிருஷ்ணாவின் பத்து தல, கவுதம் வாசுதேவ் மேனனின் "நதிகளில் நீராடும் சூரியன்" உள்ளிட்ட படங்களிலும் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிம்பு சமைக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. இரண்டு நாட்களாக, இதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் சிம்பு வல்லவன், மன்மதன் படங்களில் இருப்பதை போலவே தோற்றமளிக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரின் பழைய புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களை வைத்து மீம்ஸ்களை ஷேர் செய்து வருகிறார்கள். "15 years challenge, then STR is picasso in it" என்ற வரிகளுடைய மீம்ஸ்கள் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப்புகைப்படங்களில் 15 வருடங்களுக்கு முன்பு மன்மதன் படத்தில் இருப்பது போலவே சிம்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment