சிம்புவின் 'அஸ்வின் தாத்தா' டீசர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் கேரக்டரான மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அஸ்வின் தாத்தா கேரக்டரின் டீசர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் காட்சியிலேயே கதவை கையால் உடைத்து கொண்டு சிம்பு வயதான ஆனால் கம்பீர தோற்றதுடன் அறிமுகமாகிறார். தாத்தான்னா இதுவரைக்கும் நடக்க முடியாமல் கண்ணு தெரியாமல் காது கேட்காதவர்களைத்தான் பார்த்திருக்கேன் என்று தமன்னா கூறும் வசனம் உண்மைதான். ஆனால் இந்த தாத்தா அதிரடியாக சண்டை போடுகிறார், காதல் செய்கிறார், பசங்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
தாத்தாவை விரட்டி விரட்டி காதலிக்கும் தமன்னாவை பார்த்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக இப்படி ஒரு லவ் ஸ்டோரியா? என்று ரசிகர் மனதில் எழும் கேள்வியை சிம்பு வசனமாகவே பேசிவிடுகிறார்.
'படத்துல கூட பொண்ணுங்களை தொடாம நடிக்கிற டி.ஆருன்னு நினைச்சியாடா, அதே படத்துல தொட்டு உதட்டை கடிச்சு இழுக்கிற எஸ்.டிஆர்டா,,, என்ற வசனம் படம் வெளிவரும்போது எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிம்புவின் கெட்டப் மற்றும் பேசும் வசனங்கள் செயற்கைத்தனமாக இருப்பது போன்று டீசரில் தோன்றினாலும் முழு படத்தை பார்க்கும்போது கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமாக இருக்கும் என்றும் நம்புவோம்.
மேலும் யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இந்த டீசருக்கு மிகப்பெரிய பலம் கொடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மொத்தத்தில் இந்த டீசர் சிம்பு ரசிகர்களை திருப்தி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com