போய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தினம் பலியாகி வரும் நிலையில் அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த குட்லக் சதீஷ் என்பவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து தகவல் கேட்ட சிம்பு அதிர்ச்சி அடைந்து கண்ணீருடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பு தம்பியும் ’காதல் அழிவதில்லை’ படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரருமான குட்லக் சதீஷை காலத்தில் இழந்திருக்கின்றேன்

கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கு எல்லாம் பேசி நம்பிக்கையோடு மீண்டு வருவார் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேன். அங்கு எடுத்துப் போகும் உடல்களை பார்த்து பயந்தது ஏன் சகோதரா? பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது ஏன் சகோதரா?

எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனது ஏன் சகோதரரா? துயர் கொள்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கின்றேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவிக்கின்றேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி

அவசரப்பட்டு விட்டாய், போய் வா சகோதரா, அழுகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன்.

ரசிகர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாக தடுக்கிறது. சாதாரண நோயைத் தீவிரமாக்குவதும் பயம்தான்

நிலைகுலைதல் இதயத்தை தாக்குகிறது. தயவுசெய்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள், அதேசமயம் மன திடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருந்துகள் எடுத்து கொள்வ்தோடு அல்லாமல் தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்கவும்

இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது, பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து என புரிந்து கொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல் இன்னொருமுறை இழக்க விரும்பவில்லை

இவ்வாறு சிம்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

More News

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில்

கொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது இன்றும் கூட தமிழகத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா? ஐசிஎம்ஆர் சொல்வது என்ன?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா? தினகரன் மத்தியஸ்தமா?

அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணி அமைக்கப் போவதாக சில வதந்தி உலா வந்து கொண்டிருக்கின்றன

கத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்....! ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..!

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.