தனுஷின் முதல் முயற்சிக்கு சிம்பு கூறிய வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

தனுஷ் இயக்கிய முதல்படமான 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே இந்த டிரைலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றது.
ராதிகா சரத்குமார், எடிட்டர் ரூபன், சாந்தனு, குஷ்பு, செளந்தர்யா ரஜினிகாந்த், மோகன் ராமன் உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளத்தில் தனுஷின் முதல் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனுஷின் தொழில்முறை போட்டியாளரும், நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய சிம்பு, தனுஷூக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இயக்குனர் தனுஷூக்கு வாழ்த்துக்கள். பவர்பாண்டி குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் இந்த படம் 60வயது முதியவரின் மெல்லிய காதல், மற்றும் குடும்ப பாசம் என்ற செண்டிமெண்ட் கதையை கொண்ட படம். ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராஜ்கிரணின் சிறு வயது கேரக்டரில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் டிடி என்ற திவ்யதர்ஷினியும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.