டிரான்ஸ்பர்மேஷன் வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு சமீபத்தில் தனது உடல்எடையை முற்றிலும் குறைத்திருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய உடல்குறைப்பு எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்டு இருக்கிறார்.
நடிகர் சிம்புவின் “மாநாடு“ திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில் அவருடைய உடல்குறைப்பு பற்றிய தகவல்களும் ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது. காரணம் உடல்எடை அதிகரித்து காணப்பட்ட சிம்பு “ஈஸ்வரன்“ படத்திலேயே அறிமுக நாயகனைப்போல படு ஒல்லியான தோற்றத்துடன் காணப்பட்டார்.
இந்நிலையில் சிம்புவின் 39 ஆவது பிறந்தநாளையொட்டி அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வலம்வந்த நிலையில் தற்போது தன்னுடைய உடல்எடை குறைப்பு குறித்த வீடியோவை நடிகர் சிம்புவே தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ தொடங்குவதற்கு முன்பு உடல்எடை அதிகமாகும் அளவிற்கு விடாதீர்கள். ஒருவேளை உடல்எடை அதிகரித்துவிட்டால் அதுகூடவே சந்தோஷமாக வாழ பழகிக்கொள்ளுங்கள் எனக் கலங்கியபடியே சிம்பு பேசியிருக்கிறார். மேலும் உடல்எடை குறைப்பிற்கு முன்பு 105 கிலோவில் இருந்து சிம்பு இந்த வீடியோ முடியும்போது வெறும் 72.8 கிலோவாக குறைந்து காணப்படுகிறது.
கொரோனா நேரத்தில் உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு வெறுமனே இதற்காக வொர்க் அவுட் மட்டும் செய்யவில்லை. கிரிக்கெட், பேட்மிண்டன், டென்னிஸ் எனத் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர் பட்டாளம் நடிகர் சிம்புவை கொண்டாடி தீர்த்துவரும் நிலையில் அவரைப்போலவே தற்போது உடல்எடை குறைப்பது குறித்து இணையத்தில் அலசி வருவதையும் பார்க்க முடிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments