கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன் 110 கிலோ எடை இருந்த நிலையில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தற்போது 76 கிலோவாக மாறி இருக்கிறார் என்பதும் இந்த அதிரடி எடை குறைப்புக்கு அவரது கடுமையான உடற்பயிற்சியே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்புவின் உடல் குறைப்பு குறித்து சமீபத்தில் பேசிய அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர், சிம்பு ஒருமுறை கால்பந்து விளையாட்டு வீரர் கிரிஸ்டியனோ ரொனால்டோ அவர்களின் புகைப்படத்தை எடுத்து கொண்டு வந்து இவரை போல என்னுடைய உடலை மாற்ற வேண்டும் என்று கூறியதாகவும், இதனை அடுத்தே நான் கூறிய அறிவுரையின்படி அவர் கடுமையான பயிற்சிகள் செய்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே உடல் எடையை குறைக்கும் முயற்சியை சிம்பு எடுத்து வருவதாகவும் ஆனால் இடையிடையே அவர் உடல் எடை அதிகரித்ததாகவும், ஆனால் மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனுக்கு பின்னர் சிம்பு தனது எடைக்குறைப்பில் முழு ஈடுபாட்டில் இருந்ததாகவும் இதனை அடுத்து தற்போது அவர் ஆசைப்பட்டபடி ரொனால்டோ உடற்கட்டை பெற்றுள்ளதாகவும் பயிற்சியாளர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout