என்னோட இன்னொரு முகத்தை காட்ட வச்சிராதீங்க: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சிம்பு எச்சரிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக நடிகர் சிம்பு ஜாலியாக தொகுத்து வந்த நிலையில் சற்று முன்னர் வெளியான வீடியோவில் அவர் சீரியஸாக போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த எச்சரிக்கையில் அவர் கூறியபோது, ‘நான் உங்களிடம் மிகவும் நட்புடனும் அன்புடனும் ஜாலியாகவும் பழகி வருவதை சிலபேர் அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்கிறீர்களோ என மக்கள் நினைத்து வருகின்றனர். உங்கள் எல்லாருக்கும் தெரியும் சிம்பு என்றால் அன்பு, ஆனால் எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது, அது வம்பு.
எனவே நான் அன்பாக இருக்கிறேன் என்பதால் என்னை தேவையில்லாமல் அந்த இடத்திற்கு கொண்டு வந்துவிட வேண்டாம். என்னுடைய இன்னொரு பக்கமான வம்பை நான் வெளிப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். அதனால் தான் உங்களிடம் ஜாலியாகவும் நட்பாகவும் பழகி வருகிறேன். அதை நீங்கள் மெயின்டைன் செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில் எனக்கு மக்கள் முழு உரிமை கொடுத்திருக்கிறார்கள். வெளுத்து வாங்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களிடம் அன்பாகவே, உங்களுக்கே தெரியாமல் சில விஷயங்களை எடுத்துக்கொடுத்து, தட்டிக்கொடுத்து நட்புடன் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கிறேன்.
ஆனால் நீங்கள் அதை அட்வான்டேஜ் ஆக எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒரு நிகழ்வு வரும்போது நான் வேற மாதிரி மாறிவிடுவேன். எனவே இதை நீங்கள் புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சுமூகமாக கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
வெளுத்து வாங்க சொல்லிருக்காங்க!! ?????? #BBUltimate pic.twitter.com/QBIZFw7fkZ
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout