முகமூடியுடன் கோவில் கோவிலாக சுற்றும் சிம்பு!

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

நடிகர் சிம்பு இந்த லாக்டவுன் நேரத்தில் கேரளா சென்று உடல் எடையை குறைத்து வந்தார் என்றும் அவரது உடல் எடை தற்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் மாறியிருப்பதாகவும் பழைய சிம்புவை மீண்டும் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் விரைவில் சுசீந்திரன் இயக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ள சிம்பு, தற்போது கேரளாவில் இருந்து கிளம்பி, கோவில் கோவிலாக சுற்றி திண்டுக்கல் வந்து கொண்டிருக்கிறார்

முதல் கட்டமாக நேற்று திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சிம்பு, தன்னை யாரும் அடையாளம் காட்டிக் கொள்ளாத வகையில் முகமூடியுடன் கோவில் வாசலில் இருந்து வெளியே வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

இந்த நிலையில் தற்போது சிம்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததாக புகைப்படம் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்திலும் சிம்பு தனது முகத்தை மூடி மறைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பார்த்து முடித்தவுடன் அவர் திண்டுக்கல் சென்று அங்கு நடைபெறும் சுசீந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது