சிம்புவின் புதிய நண்பராக மாறிய விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் முக்கிய வேடங்களில் நடித்து வரும் சிம்பு மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் பல காட்சிகளில் இணைந்து நடித்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் இணையும் காட்சிகள் அனைத்தும் மாஸ் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் மட்டுமின்றி படப்பிடிப்பு முடிந்த பின்னரும் இருவரும் ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழகி நண்பர்களாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே சிம்புவின் நட்பு வட்டாரத்தில் தற்போது விஜய்சேதுபதியும் இணைந்துவிட்டதாகவே தெரிகிறது.

அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகவுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாதவன் சென்றது ஏன்? தீபா அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா ஒரு கட்சியையும், அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியையும் தொடங்கியுள்ளனர். இருவருமே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

4000 பேர் சுற்றி நின்று கைதட்டிய காலா வசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டதால்

ஆக்சன் - த்ரில்லர் தெலுங்கு படத்தில் 'கபாலி' நடிகை

'கபாலி' உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல கதாசிரியர் கிரண் இயக்கும் முதல் படமான இந்த படம் ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியன் 2' படத்திற்கு வசனம் எழுதும் பிரபல கவிஞர்

ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் திடீர் சந்திப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் முடிந்துள்ள '2.0' மற்றும் 'காலா' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளிவரவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்