'மாநாடு' படம் குறித்து செம அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்டேட் வெளியிட்டுள்ளார்.
இந்த அப்டேட்டில் ’மாநாடு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை தெருக்குரல் அறிவு பாடியிருப்பதாகவும், இந்த பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிம்பு, யுவன் சங்கர் ராஜா மற்றும் தெருகுரல் அறிவு ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
விரைவில் ,???????? @SilambarasanTR_ @thisisysr @TherukuralArivu #maanaadu pic.twitter.com/hEMV7VEybk
— sureshkamatchi (@sureshkamatchi) November 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout