இன்றுடன் நான் ஆல்கஹால் நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது: சிம்பு

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

’மாநாடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியான நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நடிகர் சிம்பு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் உரையாடினார். அதில் அவர்கள் கூறியதாவது:

சிம்பு: மன்மதன் படத்துக்கு பின் ’மாநாடு’ படத்தில் அழுது நடித்து இருக்கிறேன். ஷாட் நடித்து முடித்த பின்னும் அழுது கொண்டே இருந்தேன். ’மாநாடு’ படத்தில் ஒய்ஜி மகேந்திரனும், எஸ்.ஜே .சூர்யாவும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். இன்றுடன் நான் ஆல்கஹால் நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இனி செயல்தான். நம்ம குண்டாக இருக்கிறோம், ஒல்லியாக இருக்குமோ என்பது முக்கியமில்லை. நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். நான் இப்படி நல்லா இருக்க ரசிகர்களே காரணம். அவர்கள் பற்றி என்னிடம் பலர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இனி நீங்க ஹேப்பி ஆக இருப்பீங்க. எல்லாம் நல்லபடியாக நடிக்கும்.

சுரேஷ் காமாட்சி: சின்னப்படங்கள் எடுத்து வந்த என்னை நம்பி சிம்புவும், வெங்கட்பிரபும் ’மாநாடு’ பட வாய்ப்பை கொடுத்தார்கள். அதை சிறப்பாக நிறைவேற்றி உள்ளேன்

வெங்கட்பிரபு: ’மாநாடு’ படத்தின் வேலைகளுக்கு மக்கள், ரசிகர்கள் மரியாதை கொடுப்பார்கள். நான் இயக்கிய அஜித்தின் மங்காத்தா படத்தை விட, ’மாநாடு’ படத்தின் பட்ஜெட் அதிகம்

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' செகண்ட்லுக்: மீண்டும் ஒரு விருந்து?

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தின் டைட்டில் 'பீஸ்ட்' என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 'பீஸ்ட்' என்று டைட்டிலும் கைகளில்

கீர்த்தி சுரேஷின் 3 நிமிட யோகா வீடியோ வைரல்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படும் என்பதும் இந்த தினத்தில் பிரபலங்கள் பலர் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்கள்,

'புன்னகை தேசம்' பட நடிகரின் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் காலமாகி வருவது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர

கமல்ஹாசனை சந்தித்தது ஏன்? நடிகர் கருணாஸ் விளக்கம்!

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்

தன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பாரா சூர்யா? காயத்ரி ரகுராம் கேள்வி!

நீட் தேர்வுக்கு எதிராக சமீபத்தில் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு