'மாநாடு' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.

’மாநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் பாடல் வெளியீட்டு விழாவின் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் ’மாநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’மாநாடு’ படத்தின் டிரைலர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கும் போது நிலையில் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இந்த அதிகாரியின் கேரக்டரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

'டான்' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் அவர் தனது டப்பிங் பணியையும் முடித்து விட்டதாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல்கட்டமாக காரைக்குடி

கண், முகத்தில் காயம்… பிரபல நடிகையைத் தாக்கிய கணவர் கைது!

பாலிவுட் நடிகையும் மாடலுமான பூனம் பாண்டேவை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் அவரது கணவர் சாம் பாம்பே

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு… தமிழக அரசு விளக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும்படி